மேற்குவங்காளத்தில் 2 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி


மேற்குவங்காளத்தில் 2 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 7 Jun 2020 1:30 AM IST (Updated: 7 Jun 2020 1:06 AM IST)
t-max-icont-min-icon

மேற்குவங்காளத்தில் 2 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா, 

மேற்குவங்காளத்தில் 7 ஆயிரத்து 303 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் மாவட்ட நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று தெரியவந்துள்ளது. இருவரும் கொல்கத்தாவின் அலிபோர்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட சிவில் மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதிகளாக உள்ளனர். இருவரையும் தனிமைப்படுத்தி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீதிபதிகளுடன் தொடர்புடைய மற்ற நீதிபதிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்தபின்னரே அவர்களுக்கு கொரோனா இருக்கிறதா? என்பது தெரியவரும் என்று மேற்குவங்காள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் வீட்டிலேயே அவர்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story