ராஜஸ்தானில் ரெயில் நிலையத்தில் இறந்த மூதாட்டிக்கு கொரோனா
ராஜஸ்தானில் ரெயில் நிலையத்தில் இறந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்,
மும்பையில் இருந்து புறப்பட்ட ஒரு ரெயில், ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூருக்கு வந்து சேர்ந்தது. அதில் இருந்து இறங்கிய ஒரு 65 வயது மூதாட்டி, ரெயில் நிலையத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்தபோது, அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
பிரேத பரிசோதனைக்காக அவரது உடல், அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றை பரிசோதித்தபோது, அவருக்கு கொரோனா தாக்கியது உறுதி ஆனது.
இதையடுத்து, அவருடன் ஒரே பெட்டியில் பயணம் செய்த 99 பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்டனர். அந்த மூதாட்டிக்கு மும்பை ரெயில் நிலையத்தில் கொரோனா அறிகுறி பரிசோதிக்கப்பட்டதா என்பதை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story