மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 3,007 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 3,007 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டது.
மும்பை,
சீனாவில் உருவாகி உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு ஒவ்வொரு நாளும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
மராட்டியத்தில் இன்று 3,007 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மாநிலத்தில் மேலும் 3,007 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 85,975 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 91 பேர் உயிரிழந்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை 3,060 ஆக உயர்ந்தது.
மும்பை மாநகராட்சி வெளியிட்ட தகவலின் படி, மும்பையில் இன்று மேலும் 1,421 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மும்பையில் கொரோனாவால் இன்று 61 பேர் உயிரிழந்தனர். மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,549 ஆக உயர்ந்துள்ளது. 25,717 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 21,196 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story