டெல்லியில் இன்று மேலும் 1,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


டெல்லியில் இன்று மேலும் 1,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 7 Jun 2020 10:33 PM IST (Updated: 7 Jun 2020 10:33 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் இன்று மேலும் 1,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக,கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, கொரோனா காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

இந்தநிலையில், தலைநகர் டெல்லியில் இன்று புதிதாக ஒரே நாளில் 1,282 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,936 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 812 ஆக உள்ளது. புதிதாக யாரும் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 10,999 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 17,125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக நாட்டின் தலைநகர் டெல்லியில் நாளை முதல் அனைத்து வழிபாட்டு தலங்கள், உணவு விடுதிகள் திறக்கப்படும்.  எனினும் ஓட்டல்கள், விருந்து அரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்றும் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

மேலும், டெல்லி மாநில எல்லைகள் நாளை முதல் திறக்கப்படும். ஜூன் மாத இறுதிக்குள் டெல்லியில் கொரோனா சிகிச்சைக்காக 15 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படும். டெல்லியில் உள்ள மருத்துவமனைகள், டெல்லி வாழ் மக்களுக்காக மட்டுமே செயல்படும். மத்திய மருத்துவமனைகள் அனைவருக்காகவும் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story