கேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க வேண்டும் - சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு
கேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரத்தில், சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கேரளாவில் கடந்த மே மாதம் 15 வயதான கர்ப்பிணி பெண் யானை ஒன்று அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து கொல்லப்ப்பட்டது. ஈவு இரக்கமற்ற இந்த செயல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனக்கோரி டெல்லியை சேர்ந்த வக்கீல் அவத் புகாரி ஹவுசிக் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
அதில் அவர், கர்ப்பிணி யானை வெடி வைத்து கொல்லப்பட்டது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல். இதை தடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். கடந்த ஏப்ரல் மாதமும் இதே போல ஒரு சம்பவம் கொல்லம் மாவட்டத்தில் நடந்துள்ளது. இது போல வேறு எங்காவது சம்பவம் நடந்து இருந்தால் அவற்றின் முழு விவரத்தையும் கோரவேண்டும். கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட இந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும். விசாரணை பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story