நாசவேலைக்கு திட்டமிட்டதாக கைதான காஷ்மீர் பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு


நாசவேலைக்கு திட்டமிட்டதாக கைதான காஷ்மீர் பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 8 Jun 2020 3:45 AM IST (Updated: 8 Jun 2020 2:25 AM IST)
t-max-icont-min-icon

நாசவேலைக்கு திட்டமிட்டதாக கைதான காஷ்மீர் பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

புதுடெல்லி, 

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களின்போது, கடந்த மார்ச் மாதம், காஷ்மீரை சேர்ந்த ஹினா பஷிர் பேக் என்ற பெண்ணும், அவருடைய கணவர் ஜஹன்சாய்ப் சமியும் கைது செய்யப்பட்டனர். ஐ.எஸ். பயங்கரவாத கொள்கைகளை பரப்பியதுடன், பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

பின்னர், இந்த வழக்கு, தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைக்கப்பட்டது. சமீபத்தில், 2 பேரையும், என்.ஐ.ஏ. 10 நாள் காவலில் எடுத்தது. காவலில் இருந்தநிலையில், ஹினா பஷிர் பேக்குக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகவல், டெல்லி கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

அதனால், ஹினா பஷிர் பேக்கை டெல்லி லோக் நாயக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதே சமயத்தில், பேக்குக்கு ஜாமீன் கோரி, அவருடைய வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார்.

Next Story