ஒரு மாதத்தில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய ஆசிரியை மீது 5 மாவட்டங்களில் வழக்குப்பதிவு


ஒரு பள்ளியில் அனாமிகா பெயரில் பணியாற்றி கைதான பிரியா சிங்
x
ஒரு பள்ளியில் அனாமிகா பெயரில் பணியாற்றி கைதான பிரியா சிங்
தினத்தந்தி 8 Jun 2020 4:13 PM IST (Updated: 8 Jun 2020 4:13 PM IST)
t-max-icont-min-icon

25 பள்ளிகளில் வேலைபார்த்ததாக கூறி ஒரு மாதத்தில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய ஒரு அறிவியல் ஆசிரியையின் மோசடி: 5 மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

லக்னோ:

உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஆசிரியையாக இருக்கும் ஒருவருக்கு  ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாகக் கணக்குக் காட்டப்பட்டு, அவருக்கு மாதம் ரூ.1 கோடி ஊதியமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

மெயின்புரியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை அனாமிகா என்பவர் சுமார் 25 பள்ளிகளில் பணியாற்றுவதாகக் கூறி அவருக்கு மாதந்தோறும் ரூ.1 கோடி அளவுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது மாநிலத்தில் அம்பேத்கார் நகர், அலிகார், பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் கஸ்தூர்பா காந்தி பலிகா வித்யாலயா பள்ளியில் பணியாற்றியதாக அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இது தொடரபான விசாரணைக்கு  உத்தரப்பிரதேச மாநில துவக்கக் கல்வித் துறையின் கூடுதல் இயக்குநர் உத்தரவிட்டு இருந்தார். 

இந்த நிலையில் அனமிகா சுக்லா என்ற சான்றிதழ்கள் பெயரில் பணியாற்றி வந்த பிரியா சிங் என்பவரை கஸ்கஞ்ச் போலீசார் கைது செய்து உள்ளனர்.

ஐந்து மாவட்டங்களில் அனாமிகா சுக்லா பெயரில்  ஏற்கனவே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வாரணாசி மற்றும் அமேதியின் பி.எஸ்.ஏ.க்கள் இன்னும் முறையான புகார் அளிக்கவில்லை.இந்த மாவட்டங்களிலும் அவர் வேலை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.அனாமிகா அ.றிவியல் ஆசிரியை ஆவார்

நேர்மையின்மை, ஆள்மாறாட்டம் மூலம் மோசடி, மதிப்புமிக்க பாதுகாப்பு மோசடி செய்தல்,  மோசடி செய்தல்,  போலி ஆவணத்தைப் பயன்படுத்துதல் என அவருக்கு எதிராக  அனாமிகாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது.

Next Story