தெலுங்கானாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி; முதல் அமைச்சர் அறிவிப்பு
தெலுங்கானாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு எதுவுமின்றி தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புக்கு கொண்டு செல்லப்படுவர் என அரசு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஐதராபாத்,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஊரடங்கு அமலாகி பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் பல மாநிலங்களில் பொது தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் எழுந்தது. தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருந்தது.
இந்நிலையில், தெலுங்கானாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு எதுவுமின்றி தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புக்கு கொண்டு செல்லப்படுவர் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவருக்கும் இன்டெர்னல் மதிப்பெண்கள் அடிப்படையில் கிரேடு வழங்கப்படும். கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில் தேர்வு நடத்துவது என்பது சாத்தியமல்ல என தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.
இதேபோன்று, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அவர் அனுமதி வழங்கியுள்ளார். அரசு தேவையான நேரத்தில் வெளியிட்டு உள்ள, வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு குறைந்த பணியாளர்களுடன் படப்பிடிப்புகளை நடத்தி கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story