மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தை கடந்தது
மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 88 ஆயிரத்தை கடந்துள்ளது.
புனே,
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்த சுழலில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரமாக இன்று உயர்வடைந்து உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத வகையில், 9,983 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 206 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 7,135 ஆக உயர்ந்து உள்ளது. நாட்டில் மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிக அளவாக உள்ளது.
இந்நிலையில் மராட்டியத்தில் இன்று மேலும் 2,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88,528 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 109 பேர் உயிரிழந்த நிலையில், வைரஸ் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,169 ஆக அதிகரித்துள்ளது.
மராட்டியத்தில் இதுவரை சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 40 ஆயிரத்து 975 ஆக உள்ளது. 44 ஆயிரத்து 374 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story