“எல்லையின் உண்மை நிலை எல்லோருக்கும் தெரியும்” - அமித்ஷா கருத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு
எல்லையின் உண்மை நிலை எல்லோருக்கும் தெரியும் என்று அமித்ஷா கருத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
தனது எல்லையை பாதுகாக்கும் அளவுக்கு இந்தியா வலிமையானது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் கூறியிருந்தார். இந்நிலையில், அவரது கருத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நாட்டின் எல்லையில் உள்ள உண்மை நிலவரம் எல்லோருக்கும் தெரியும். இருப்பினும், ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்ற சிந்தனை நல்லதுதான்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story