இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா


இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Jun 2020 4:15 AM IST (Updated: 9 Jun 2020 2:58 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,56,611 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 6-வது இடத்தில் இந்தியா நீடிக்கிறது. ஆனாலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,24,095 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.

மராட்டிய மாநிலத்தில் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் புதிதாக 1,562 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33,229 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் 27,654, குஜராத்தில் 20,070, ராஜஸ்தானில் 10,599, உத்தரபிரதேசத்தில் 10,536, மத்திய பிரதேசத்தில் 9,401, மேற்கு வங்காளத்தில் 8,187, கர்நாடகாவில் 5,452, பீகாரில் 5,088, ஆந்திராவில் 4,708, அரியானாவில் 4,448, ஜம்மு காஷ்மீரில் 4,087, தெலுங்கானாவில் 3,580, ஒடிசாவில் 2,856, பஞ்சாப்பில் 2,608, அசாமில் 2,565 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

கேரளாவில் 1,914 பேரையும், உத்தரகாண்டில் 1,355 பேரையும், ஜார்கண்டில் 1,099 பேரையும், சத்தீஸ்காரில் 1,073 பேரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. மற்ற மாநிலங்களில் பாதிப்பு ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது.

கொரோனாவால் 24 மணி நேரத்தில் 206 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் பலி எண்ணிக்கை 7,135 ஆக உயர்ந்துள்ளது. இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 3,060 பேரை இந்த வைரஸ் பலிகொண்டுள்ளது.

குஜராத்தில் 1,249, டெல்லியில் 761, மத்தியபிரதேசத்தில் 512, மேற்கு வங்காளத்தில் 396, தமிழகத்தில் 286, உத்தரபிரதேசத்தில் 275, ராஜஸ்தானில் 240, தெலுங்கானாவில் 123 பேரும், ஆந்திராவில் 75, கர்நாடகாவில் 61, பஞ்சாபில் 51, ஜம்மு காஷ்மீரில் 41, பீகாரில் 30, அரியானாவில் 28 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

கேரளாவில் 15, உத்தரகாண்டில் 13, ஒடிசாவில் 9, ஜார்கண்டில் 7, சண்டிகார் மற்றும் இமாசலப்பிரதேசத்தில் தலா 5, அசாம் மற்றும் சத்தீஸ்காரில் தலா 4, லடாக் மற்றும் மேகாலயாவில் தலா ஒருவரையும் கொரோனா காவு வாங்கி இருக்கிறது.

நாடுமுழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,25,381 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Next Story