காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இந்தியா பதிலடி


காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இந்தியா பதிலடி
x
தினத்தந்தி 9 Jun 2020 7:29 AM IST (Updated: 9 Jun 2020 7:29 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்தி வரும் துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் காரி கர்மாரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி அத்துமீறி நேற்றிரவு 7.45 மணியளவில் தாக்குதலில் ஈடுபட்டது.  இந்திய பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தின் மன்கோட் பிரிவில் இன்று காலை 6.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதலை தொடர்ந்து உள்ளது.  அவர்களது துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.

Next Story