கேரளாவில் மேலும் 91 பேருக்கு கொரோனா தொற்று


கேரளாவில் மேலும் 91 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 9 Jun 2020 8:49 PM IST (Updated: 9 Jun 2020 8:49 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் மேலும் 91 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா இன்று திருவனந்தபுரத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேரளாவில் இன்று 91 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 53 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 27 பேர் வெளி மாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள் ஆவர்.

இதுவரை கேரளாவில்கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 848 ஆக உயர்ந்துள்ளது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 1,231 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் நோய்த் தீவிரமுள்ள பகுதிகளின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் 2,04,153 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2,02,240 பேர் வீடுகளிலும், 1,913 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story