சவுதி அரேபிய நிறுவனம் 2,000 ஊழியர்களை திருப்பி அனுப்புகிறது ; அவர்களில் 1,665 பேர் இந்தியர்கள்


சவுதி அரேபிய நிறுவனம் 2,000 ஊழியர்களை திருப்பி அனுப்புகிறது ; அவர்களில் 1,665 பேர் இந்தியர்கள்
x
தினத்தந்தி 10 Jun 2020 1:20 AM GMT (Updated: 10 Jun 2020 1:20 AM GMT)

சவுதி அரேபியாவில் 2,000 ஊழியர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள், அவர்களில் 1,665 பேர் இந்தியர்கள் என்று சவுதி நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொச்சி: 

வளைகுடாவில் உள்ள சவுதி அரேபியாவை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம் கொரோனா அச்சம் காரணமாக  தனது 1,600 க்கும் மேற்பட்ட இந்திய ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நடவடிக்கைகள் ஜூன் 11 அன்று முடிவடையும், மொத்தம் ஒன்பது விமானங்கள் இந்தியாவுக்கு வரும்.

பெட்ரோ கெமிக்கல் மற்றும் கனரக உபகரணத் துறைகளில் இயங்கும் ஜி.சி.சி.யின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றின் 10,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் வளைகுடாவில், முக்கியமாக ஜுபைலில் உள்ளனர். இது மிகப்பெரிய தொழில்துறை நகரங்களில் ஒன்றாகும்.

கொரோனா அச்சம் மற்றும்  பல்வேறு அவசரநிலைகளை கருத்தில் கொண்டு திருப்பி அனுப்புவதற்காக இவர்களில், 2,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை நிறுவனம் தேர்வு செய்துள்ளது.

இந்திய துணைக் கண்டத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,000 ஊழியர்கள் திருப்பி அனுப்பப்படுவதாகவும், அவர்களில் 1,665 பேர் இந்தியர்கள் 

விமான ஒப்பந்த நிறுவனம் ஏற்கனவே ஜூன் 5 ம் தேதி சென்னை மற்றும் ஹைதராபாத், ஜூன் 6 அன்று அகமதாபாத் மற்றும் டெல்லி மற்றும் ஜூன் 7 ம் தேதி மங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு பயணிகளை கொண்டு வந்து உள்ளது.

வளைகுடா ஏர் விமானத்தில் இருந்து சார்ட்டர் செய்யப்பட்ட மற்றும் சவுதி அரேபியாவின் தம்மம் நகரத்திலிருந்து இயக்கப்படும் இந்த விமானங்களில் மற்ற மூன்று அண்டை நாட்டு பயணிகளையும் உள்ளடக்கியது.


Next Story