ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 10 Jun 2020 3:25 PM IST (Updated: 10 Jun 2020 3:25 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் சோபியானில் பாதுகாப்பு படையினர்  நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சுகோ பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இதில், 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து  அப்பகுதியில் பாதுகாப்புபடையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர், கடந்த 72 மணி நேரத்தில் 11 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, நவ்சேரா பகுதியில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story