கொரோனா பாதிப்பு:கடந்த 24 மணி நேரத்தில் 357 பேர் மரணம்; அதிகபட்ச ஒருநாள் உயிரிழப்பு
கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 357 ஆக உள்ளது. இது அதிகபட்ச ஒருநாள் உயிரிழப்பாகும்.
புதுடெல்லி
இந்தியாவில் கடந்த24 மணி நேரத்தில் 9,996 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 2.8 லட்சமாக அதிகரித்து உள்ளது.
357 நோயாளிகள் மரணம் அடைந்து உள்ளனர். கொரோனா பாதிப்பு இறப்பில் இந்தியா தனது மிகப்பெரிய ஒற்றை நாள் உயர்வை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் இதுவரை தொற்று நோய் காரணமாக மொத்தம் 8,102 நோயாளிகள் இறந்துள்ளனர். இந்த இறப்புகளில் பெரும்பாலானவை நாட்டின் மிகப்பெரிய கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட் மராட்டிய மாநிலத்தில் இருந்து பதிவாகியுள்ளன, இங்கு இதுவரை 3,483 நோயாளிகள் இறந்துள்ளனர்.
இந்தியாவில் தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாக 9 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது.
தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து இந்தியா முழுவதும் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,51,808 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story