கைத்தட்டல், பாராட்டு; ஆனால் சம்பளம் வழங்கப்படவில்லை என டாக்டர்கள் புகார்


கைத்தட்டல், பாராட்டு; ஆனால் சம்பளம் வழங்கப்படவில்லை என டாக்டர்கள் புகார்
x
தினத்தந்தி 11 Jun 2020 5:49 PM GMT (Updated: 11 Jun 2020 5:49 PM GMT)

டெல்லி கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் ரெசிடென்ட் டாக்டர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் ஆகியோர் ‘கொரோனா போர் வீரர்களாக’ அழைக்கப்படுகின்றனர்.  தங்கள் உயிரை பணையம் வைத்து நாட்டில் லட்சக்கணக்கான டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் பணியாற்றும் ரெசிடென்ட் டாக்டர்களுக்கு கடந்த மார்ச் முதல் சம்பளம் வழங்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை ரெசிடென்ட் டாக்டர்கள் சங்க தலைவர் குமார் கூறியதாவது:-

மார்ச், ஏப்ரல், மே, மாத சம்பளம் இன்னும் எங்களுக்கு தரவில்லை. அதனால் அனைவரும் ராஜினாமா செய்யும் முடிவில் உள்ளோம். அந்த நேரத்தில் எங்கள் சேவை நிற்காது. வேறு ஏதாவது மருத்துவமனையில் பணிபுரிவோம்.

மக்கள் எங்களை பாராட்டுகிறார்கள், கைதட்டி ஊக்குவிக்கிறார்கள், போர் வீரர்கள் என்று புகழ்கிறார்கள், ஆனால் எங்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்க வில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஜூன் 16 ம் தேதிக்குள் சம்பளம் வழங்கவில்லை என்றால் நாங்கள் மொத்தமாக ராஜினாமா செய்து விடுவோம்.

சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் எங்கள் பிரச்சினையை தீர்ப்பார்கள் என்று நம்புகிறோம். சம்பளம் வழங்கப்படாததால் அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க முடியவில்லை என்றார்.


Next Story