331 பேரின் சளி மாதிரி கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு


331 பேரின் சளி மாதிரி கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 12 Jun 2020 1:46 AM IST (Updated: 12 Jun 2020 1:46 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீகாளஹஸ்தியில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

ஸ்ரீகாளஹஸ்தி,

ஸ்ரீகாளஹஸ்தியில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. சிவன் கோவில் வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் 181 பேரின் சளி மாதிரியைச் சேகரித்தனர். அதேபோல் ஸ்ரீகாளஹஸ்தியில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மற்றொரு மருத்துவ முகாமை ஏற்பாடு செய்து, அங்கு ஜெயராம்ராவ் தெரு மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 150 பேர் உள்பட மொத்தம் 331 பேரிடம் இருந்து சளி மாதிரியைச் சேகரித்து கொரோனா தொற்று பரிசோதனைக்காக திருப்பதியில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story