மும்பையின் மிகப்பெரிய தனியார் ஆய்வகம் 4 வாரங்களுக்கு கொரோனா சோதனைகளை நடத்த தடை
பரிசோதனை முடிவுகள் தாமதம் காரணமாக மும்பையின் மிகப்பெரிய தனியார் ஆய்வகம் அடுத்த நான்கு வாரங்களுக்கு கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரசால் அதிக பாதிப்பை சந்தித்து வரும் மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் புதிதாக 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது. 32,810 பேர் பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் டெல்லி 3-வது இடத்தில் உள்ளது.
மும்பையின் மிகப்பெரிய தனியார் ஆய்வகம் ஒன்று அடுத்த நான்கு வாரங்களுக்கு கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகத்தில் இருந்து சோதனை முடிவுகள் வெளியாக மிகவும் தாமதமாகி உள்ளது. இதனால் நகர குடிமை அமைப்பான பிரஹன் மும்பை மாநகராட்சியில் இருந்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
சோதனை முடிவு அறிக்கை தாமதம் என்பது நோய் தொடர்பு கண்டுபிடிப்பதில் சிரமங்களுக்கு வழிவகுக்கிறது. மேலும் இது தாமதமான சிகிச்சைக்கு வழிவகுக்கும் மற்றும் சில சந்தர்ப்பங்களில், அதிக மரணத்திற்கு வழிவகுக்கும் என்று பிஎம்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வகம் தங்களுக்கு ஏற்பட்ட தாமதங்களை ஒப்புக் கொண்டுள்ளது, தங்கள் ஊழியர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளானார்கள். தாமதமான அறிக்கைகளின் சதவீதம் மிகக் குறைவு என்றும் ஆய்வகம் கூறியது.
மற்றொரு தனியார் ஆய்வகமான தைரோகேர் தானே மாநகராட்சியால் தவறான சோதனைகளுக்காக தடை விதிக்கப்பட்டு இருந்தது ஆனால் இப்போது சோதனையை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story