கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி
கொரோனா வைரஸ் நோய் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது, மராட்டியம், டெல்லி, தமிழ்நாடு, அரியானா, மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்திரபிரதேசத்தில் நிலைமை மிகவும் கடுமையாக உள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி இந்த மாநிலங்களில் கடந்த 10 நாட்களில் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி வருகிறது. மேலும் ஒருநாள் பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷியாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் பாதிப்புகளில் இந்தியா தற்போது உலகில் நான்காவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் வரும் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக காணொலி மூலம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story