குப்பை வண்டியில் பிணத்தை எடுத்து சென்ற விவகாரம்: உத்தரபிரதேச அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்


குப்பை வண்டியில் பிணத்தை எடுத்து சென்ற விவகாரம்: உத்தரபிரதேச அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
x
தினத்தந்தி 13 Jun 2020 1:45 AM IST (Updated: 13 Jun 2020 1:00 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தின் உத்ராலாவில் உள்ள அரசு அலுவலகத்துக்கு கடந்த 10-ந்தேதி சென்ற ஒருவர் அதன் வாயில் அருகே திடீரென சுருண்டு விழுந்து இறந்தார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தின் உத்ராலாவில் உள்ள அரசு அலுவலகத்துக்கு கடந்த 10-ந்தேதி சென்ற ஒருவர் அதன் வாயில் அருகே திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். அவரது உடலை நகராட்சி ஊழியர்கள் குப்பை சேகரிக்கும் வேன் ஒன்றில் ஏற்றி எடுத்து சென்றனர்.

போலீசாரின் கண்முன்னே நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு மாநிலம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது. இந்த சம்பவத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பதில் அளிக்குமாறு உத்தரபிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் மாநில போலீஸ் டி.ஜி.பி., பல்ராம்பூர் நகராட்சி தலைவர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

Next Story