தெலுங்கானாவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று


தெலுங்கானாவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 14 Jun 2020 2:00 AM IST (Updated: 14 Jun 2020 1:33 AM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்யுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் தீவிரமடைந்து உள்ளது. அங்கு ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏ. ஒருவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக மாநில நிதி மந்திரி ஹரிஷ் ராவின் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஹரிஷ் ராவுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எனினும் அவர் தனிமைப்படுத்திக்கொண்டு கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

மாநிலத்தில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,484 ஆக இருந்தது.

Next Story