பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் விரைவில் இந்தியாவுடன் இணைவார்கள் - ராஜ்நாத் சிங் பேச்சு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் விரைவில் இந்தியாவுடன் இணைவார்கள் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெறும் ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் மிக உயர்வான இடத்தை அடையப் போகிறது என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வாழும் மக்கள் தங்களை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ள முன் வருவார்கள். இது நடைபெறும் நாளில் நமது அரசாங்கத்தின் லட்சியங்களில் ஒன்று நிறைவேறும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் பாகிஸ்தான் கொடிகளும், ஐ.எஸ்.ஐ.எஸ். கொடிகளும் உயர பறந்ததாகவும் தற்போது இந்திய நாட்டின் கொடிகள் மட்டுமே அங்கு காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த இந்திய அரசு முயற்சி செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related Tags :
Next Story