இந்தியா பாகிஸ்தான் - சீனா நிலத்தை விரும்பவில்லை அமைதியை மட்டுமே விரும்புகிறது- நிதின் கட்கரி


இந்தியா பாகிஸ்தான் - சீனா நிலத்தை விரும்பவில்லை அமைதியை மட்டுமே விரும்புகிறது- நிதின் கட்கரி
x
தினத்தந்தி 15 Jun 2020 6:35 AM IST (Updated: 15 Jun 2020 4:04 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா பாகிஸ்தான் -சீனா நிலத்தை விரும்பவில்லை அமைதியை மட்டுமே விரும்புகிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

நாக்பூர்

நாக்பூர் பாஜக தொண்டர்களிடம் இணையம் வழியாக உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரிகூறியதாவது:-

சீனா, பாகிஸ்தான், பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் நில பகுதிகளை ஆக்கிரமிக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை. இந்தியா விரும்புவது அமைதி மற்றும் அகிம்சை மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார். 

 பூட்டான் நிலத்தை இந்தியா ஒருபோதும் கைப்பற்ற முயற்சிக்கவில்லை என்றார். 1971 ல் பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற்ற பிறகும், வங்காள தேசம் ஒரு சுதந்திர அரசாங்கத்தை நிறுவ இந்தியா உதவியது.

"போரில் வென்ற பிறகு எங்கள் நாடு ஷேக் முஜிபுர் ரஹ்மானை வங்காளதேசத்தின் பிரதமராக்கியது, அதன்பிறகு எங்கள் வீரர்கள் திரும்பினர் என உதாரணங்களை சுட்டிக்காட்டினார்.

நாங்கள் ஒரு அங்குல நிலத்தை கூட எடுக்கவில்லை. பாகிஸ்தான் அல்லது சீனாவின் நிலத்தை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் விரும்புவது அமைதி, நட்பு, அன்பு மற்றும் ஒன்றாக வேலை செய்ய விரும்புவது" என்று அவர் கூறினார்.


Next Story