நடப்பு நூற்றாண்டின் இறுதிக்குள் இந்தியாவின் வெப்பநிலை கணிசமாக உயரும் - மத்திய அரசு அறிக்கையில் தகவல்


நடப்பு நூற்றாண்டின் இறுதிக்குள் இந்தியாவின் வெப்பநிலை கணிசமாக உயரும் - மத்திய அரசு அறிக்கையில் தகவல்
x
தினத்தந்தி 16 Jun 2020 1:45 AM IST (Updated: 16 Jun 2020 1:33 AM IST)
t-max-icont-min-icon

நடப்பு நூற்றாண்டின் இறுதிக்குள் இந்தியாவின் வெப்பநிலை கணிசமாக உயரும் என்று மத்திய அரசு அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

பருவநிலை மாற்றத்தால், இந்தியாவில் ஏற்பட உள்ள பாதிப்பு குறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பருவநிலை மாற்றத்தால், இந்தியாவில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் சராசரி வெப்பநிலை 4.4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். அதுபோல், நூற்றாண்டின் இறுதிக்குள், ஏப்ரல் முதல் ஜூன் மாதம்வரையிலான கோடை காலத்தில் அனல் காற்று வீசும் அளவு 3 முதல் 4 மடங்கு அதிகரிக்கும்.

அனல் காற்று வீசும் சராசரி கால அளவு இரு மடங்காகும். கடற்பரப்பு வெப்பநிலை, கடந்த பல ஆண்டுகளாக 1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. வடஇந்திய பெருங்கடலில் கடல் நீர்மட்டம், 100 ஆண்டுகளுக்கு மேலாக உயர்ந்து வருகிறது. நூற்றாண்டின் இறுதிக்குள் 300 மி.மீட்டர் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story