இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியது
இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி
அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகளை பதிவு செய்து வருகின்றன.
கடந்த இரண்டு நாட்களில் அமெரரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது, ஆனால் பிரேசில் மற்றும் ரஷ்யாவில் தொடர்ந்து கொரோனா இறப்புகள் அதிகரித்து வருகின்றன.
பிரேசிலின் கொரோனா வைரஸ் வழக்குகள் 8.9 லட்சத்தை கடந்து உள்ளது 43,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். லத்தீன் அமெரிக்க பகுதி ஏற்கனவே 80,000 இறப்புகளை தாண்டிவிட்டது.
மத்திய சுகாதாரத்துறை தகவல்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,667 புதிய கொரோனா பதிவாகியுள்ளன, இறப்பு எண்ணிக்கை 9,900 ஐ எட்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்து 091ஆக உயர்ந்து உள்ளது.
Related Tags :
Next Story