காய்ச்சல் - சுவாசக் கோளாறு காரணமாக டெல்லி சுகாதார அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி
அதிக காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக டெல்லி சுகாதார அமைச்சர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி
அதிக காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இன்று ராஜீவ் காந்தி சூப்பர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார்.டெல்லி முதல் அமைச்சர் கெஜ்ரிவால் ஏற்கனவே கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு உள்ளார்.
சத்யேந்தர் ஜெயினுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இன்று சோதனை முடிவு வெளியாகும்.
மராட்டியம் மற்றும் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 42,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகளுடன் டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது.
Related Tags :
Next Story