இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,881 பேருக்கு கொரோனா பாதிப்பு- 334 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,881 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. - 334 பேர் உயிரிழந்து உள்ளனர்.
புதுடெல்லி
கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நான்காவது நாடாகவும், ஆசியாவில் கொரோனா வைரஸ் நோயின் தொற்றுநோய்களின் மிகப்பெரிய மையமாகவும் இந்தியா மாறியுள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில்
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,67,000தை கடந்தது.மேலும் 344 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 12,200ஐ தாண்டியது. 194325 பேர் குணமாகி உள்ளனர். நாட்டில் உயிரிழப்பு விகிதம் 3.3 சதவீதமாக குறைந்துள்ளது எனக்கூறப்பட்டு உள்ளது.
மராட்டியத்தில் புதிதாக 3,300 பேர் உட்பட ஒரு லட்சத்து 16,752 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,400 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு 47,000 தை கடந்தது.
Related Tags :
Next Story