புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.50 ஆயிரம் கோடியில் திட்டம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.50 ஆயிரம் கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க 25 வகையான பணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான வேலைகளில் புலம்பெயர் தொழிலாளர்களை ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
தொடர்ந்து இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது;-
“விவசாயம், அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது போன்ற பணிகளில், அந்தந்த ஊர் மக்களை உள்ளூரிலேயே பணி வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொருளாதார இழப்பை சரி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட போது, பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் 116 மாவட்டங்களுக்கு அதிக அளவில் திரும்பியுள்ளனர். எனவே, புலம்பெயர் தொழிலாளர்களின் திறனுக்கேற்ப பணி வாய்ப்புகளை ஏற்படுத்த ‘கரிப் கல்யாண் ரோஜ்கார் அபியான்’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story