அனைத்து கட்சி கூட்டத்தில் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்கள்


அனைத்து கட்சி கூட்டத்தில் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்கள்
x
தினத்தந்தி 19 Jun 2020 11:49 AM IST (Updated: 19 Jun 2020 11:49 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தில் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்கள்.

புதுடெல்லி

இந்திய சீன எல்லை பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. லடாக் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டமானது, இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி: லடாக்கில் இந்தியா-சீனா மோதல் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அழைத்த அனைத்து தரப்பு கூட்டத்தில் 

பிரதமர் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில்சோனியா காந்தி, மம்தா பானர்ஜி , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த் கூட்டத்திற்கு ராஷ்டீரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பு இல்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தேஜாஷ்வி யாதவ் தனது கட்சிஏன் அழைக்கப்படவில்லை என்று ஒரு டுவீட்டில் கேள்வி எழுப்பி உள்ளார்.


Next Story