சீனாவுடனான மோதல் ராணுவ வீரர்கள் வீரமரணம் : அயோத்தி ராமர்கோவில் கட்டுமானம் தற்காலிகமாக நிறுத்தம்
சீனாவுடனான மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதை தொடர்ந்து அயோத்தி ராமர்கோவில் கட்டுமானம் தற்காலிகமாக நிறுத்தை வைக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி
இந்திய-சீன வீரர்கள் இடையே லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15 அன்று மிகப்பெரிய மோதல் நடந்து உள்ளது. நமது தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்து உள்ளனர்.
இதை தொடர்ந்து சீனாவுக்கு எதிராக நாடு முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்தை ராமர் கோவில் அறக்கட்டளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்து உள்ளது.
இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து கவலை தெரிவித்த ராமர் கோவில் அறக்கட்டளை கோவில் கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும் கட்டுமானத்திற்கான புதிய தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.இதுகுறித்த அறிக்கையில், இந்திய-சீனா எல்லையில் தற்போது நிலைமை தீவிரமாகியுள்ளது.நாட்டைப் பாதுகாப்பது தற்போது முக்கியம் என்றும் அறக்கட்டளை குறிப்பிட்டுள்ளது.
கோவிலின் கட்டுமானத்தைத் தொடங்குவதற்கான முடிவு, நாட்டின் நிலைமைக்கு ஏற்ப எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என்று அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story