19 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல்:ஆந்திராவில் 4 இடங்களையும் ஒய்.எஸ்.ஆர். காங். கைப்பற்றியது


19 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல்:ஆந்திராவில் 4 இடங்களையும் ஒய்.எஸ்.ஆர். காங். கைப்பற்றியது
x
தினத்தந்தி 20 Jun 2020 12:25 AM GMT (Updated: 20 Jun 2020 12:25 AM GMT)

8 மாநிலங்களில் 19 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் நேற்று நடந்தது. இதில் ஆந்திராவில் 4 இடங்களையும் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றியது.

புதுடெல்லி, 

8 மாநிலங்களில் 19 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் நேற்று நடந்தது. இதில் ஆந்திராவில் 4 இடங்களையும் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றியது.

மாநிலங்களவையில் காலியாக உள்ள 19 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 8 மாநிலங்களில் இடம்பெற்றுள்ள இந்த காலியிடங்களில் வெற்றி பெற பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடும் போட்டி போட்டன. இதைப்போல மாநில கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கின.

நாடு முழுவதும் வேகமெடுத்துள்ள கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்த தேர்தல் நேற்று நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முக கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றி வாக்களித்தனர். முன்னதாக அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்திய பின்னரே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

பரபரப்பாக நடந்து முடிந்த இந்த தேர்தல் முடிவுகள் மாலையில் வெளியாகின. இதில் மத்திய பிரதேசத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும் இங்கு பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட சுமர் சிங் சோலங்கியும் வெற்றி பெற்றார்.

இதைப்போல ராஜஸ்தானில் தேர்தல் நடந்த 3 இடங்களில் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் 2 பேரும், பா.ஜனதா வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர். ஜார்கண்டில் 2 இடங்களுக்கு நடந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரேனும், மாநில பா.ஜனதா தலைவர் தீபக் பிரகாஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஆந்திராவில் 4 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 4 வேட்பாளர்களும் அபார வெற்றி பெற்றனர். தெலுங்குதேசம் கட்சி இந்த தேர்தலிலும் தோல்வியடைந்தது. மேகாலயா, மிசோரமில் தேர்தல் நடந்த தலா ஓரிடத்தை ஆளும் கூட்டணிகள் வென்றன.

அரசியல் குழப்பம் நிலவி வரும் மணிப்பூரில் ஓரிடத்துக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் லெய்சம்பா சனஜாவோபா 28 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் மங்கி பாபு 24 வாக்குகளே பெற முடிந்தது. இதன் மூலம் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள பா.ஜனதா ஊக்கம் பெற்றுள்ளது.

இதற்கிடையே குஜராத்தில் 4 இடங்களுக்கு தேர்தல் நடந்த நிலையில், அங்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 2 பேரின் வாக்

Next Story