மத்திய அரசு அறிவித்த சலுகைகளுக்கு ஏற்பவட்டி குறைக்கப்படுவதை கண்காணித்து வருகிறோம்-நிர்மலா சீதாராமன் தகவல்


மத்திய அரசு அறிவித்த சலுகைகளுக்கு ஏற்பவட்டி குறைக்கப்படுவதை கண்காணித்து வருகிறோம்-நிர்மலா சீதாராமன் தகவல்
x
தினத்தந்தி 20 Jun 2020 12:55 AM GMT (Updated: 20 Jun 2020 12:55 AM GMT)

மத்திய அரசு அறிவித்த சலுகைகளுக்கு ஏற்ப வட்டி குறைக்கப்படுவதை கண்காணித்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தார்.

புதுடெல்லி, 

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தொழில் மற்றும் வர்த்தக பேரவை நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தாக்கத்தை தணிக்கும் நிவாரண நடவடிக்கையாக, ரிசர்வ் வங்கி, ரெபோ ரேட் விகிதத்தை குறைத்துள்ளது. அந்த பலனை வாடிக்கையாளர்களுக்கு வட்டி குறைப்பு மூலமாக வங்கிகள் அளிக்கிறதா என்று மத்திய அரசு கண்காணித்து வருகிறது. 

அதுபோல், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.3 லட்சம் கோடி பிணையில்லா கடன் திட்டப்படி, அந்த நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்படுகிறதா என்பதையும் மத்திய அரசு கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story