இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் எங்கே நடந்தது? - ப. சிதம்பரம் கேள்வி


இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் எங்கே நடந்தது? - ப. சிதம்பரம் கேள்வி
x
தினத்தந்தி 20 Jun 2020 3:58 PM IST (Updated: 20 Jun 2020 3:58 PM IST)
t-max-icont-min-icon

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழையவில்லை என்றால் இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் எங்கே நடந்தது? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

லடாக் எல்லையில், இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து, நேற்று காணொலிக் காட்சி மூலம் அனைத்து கட்சிக் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கூட்டினார். அதில் பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாதுகாப்பு படையினர் நமது எல்லையை பாதுகாக்கும் முழு திறனுடன் உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழையவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் இந்திய எல்லையில், சீனா ஊடுருவவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறுவது உண்மையெனில் மே 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடந்த பிரச்சினை என்ன? என முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.  

அதில், சீன ராணுவம் இந்திய நிலப்பகுதியில் நுழையவில்லை என்றால், எதற்காக மோதல் நடைபெற்றது? எதற்காக ராணுவ தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது? இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டார்களே, அது எங்கே நடந்தது? இந்திய நிலப்பகுதியிலா அல்லது சீன நிலப்பகுதியிலா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.

Next Story