தேசிய செய்திகள்

நாளை முதல் 3 நாட்கள் ராஜ்நாத் சிங் ரஷியாவில் சுற்றுப்பயணம் + "||" + Rajnath Singh to pay 3-day visit to Russia from Monday to attend grand parade

நாளை முதல் 3 நாட்கள் ராஜ்நாத் சிங் ரஷியாவில் சுற்றுப்பயணம்

நாளை முதல் 3 நாட்கள் ராஜ்நாத் சிங் ரஷியாவில் சுற்றுப்பயணம்
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக ரஷ்யா செல்கிறார்.

புதுடெல்லி,

2-ம் உலகப்போரில் ஜெர்மனியை சோவியத் ரஷியா வென்றதன் 75-வது நினைவு தினத்தை ரஷியா சிறப்பாக கொண்டாடுகிறது. இதையொட்டி பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பு ஒன்றை மே மாதம் நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த அணிவகுப்பு தள்ளி வைக்கப்பட்டது.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் 24-ந்தேதி நடைபெறும் இந்த அணிவகுப்பை பார்வையிடுவதற்காக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக நாளை ரஷியா செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர் 2-ம் உலகப்போர் வெற்றி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். சீனாவுடனான மோதலுக்கு மத்தியில் ராஜ்நாத் சிங்கின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதற்கிடையே மாஸ்கோவில் நடைபெறும் இந்த பிரமாண்ட அணிவகுப்பில் பங்கேற்பதற்காக இந்தியாவின் முப்படைகளில் இருந்து 75 வீரர்களை கொண்ட குழு ஒன்று ஏற்கனவே ரஷியா சென்று உள்ளது. இந்த குழுவினர் சீன பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 11 நாடுகளின் வீரர்களுடன் இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர்: எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆய்வு
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆய்வு மேற்கொண்டார்.
2. பாதுகாப்பான கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம்- ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பான கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3. வரும் 17-ஆம் தேதி லடாக் செல்கிறார் ராஜ்நாத்சிங்
வரும் 17-ஆம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லடாக் பயணம் மேற்கொள்கிறார்.
4. கொரோனாவில் இருந்து விரைவில் விடுதலை...! உலகின் முதல் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி ரஷ்யா வெற்றி
கொரோ‌னா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி சோதனை நடத்தி வெற்றி பெற்றுவிட்டதாக ரஷ்ய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
5. ரஷ்யாவில் கால்பந்தாட்ட பயிற்சியின் போது கோல்கீப்பரை தாக்கிய மின்னல்
ரஷ்யாவில் கால்பந்தாட்ட பயிற்சியின் போது 16 வயது வீரரை மின்னல் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது.