ஓய்வூதிய நிதி திட்டங்களில் எல்லையோர நாடுகள் முதலீடு செய்ய கட்டுப்பாடுகள்-சீனாவுடனான மோதலை தொடர்ந்து நிதியமைச்சகம் பரிந்துரை


ஓய்வூதிய நிதி திட்டங்களில் எல்லையோர நாடுகள் முதலீடு செய்ய கட்டுப்பாடுகள்-சீனாவுடனான மோதலை தொடர்ந்து நிதியமைச்சகம் பரிந்துரை
x
தினத்தந்தி 21 Jun 2020 4:15 AM IST (Updated: 21 Jun 2020 1:58 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வூதிய நிதி திட்டங்களில் எல்லையோர நாடுகள் முதலீடு செய்ய கட்டுப்பாடுகள்-சீனாவுடனான மோதலை தொடர்ந்து நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் ஓய்வூதிய நிதி திட்டங்களில் வெளிநாடுகள் முதலீடு செய்யும் விவகாரத்தில், பாகிஸ்தான், வங்காளதேசத்தை தவிர சீனா உள்ளிட்ட எல்லையோர நாடுகள் மத்திய அரசின் ஒப்புதல் இன்றி முதலீடு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. தற்போது லடாக்கில் இந்தியாவுடன் சீனா மோதல் ஈடுபட்டத்தை தொடர்ந்து இந்த முதலீடு விவகாரத்தில் கட்டுப்பாடுகளை விதிக்க நிதியமைச்சகம் முடிவு செய்து உள்ளது.

அதன்படி ஓய்வூதிய நிதி திட்டங்களில் முதலீடு செய்ய சீனா உள்ளிட்ட இந்தியாவின் எல்லையோர நாடுகள் அனைத்தும் மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய நிதியமைச்சகம் உருவாக்கி அரசுக்கு அனுப்பி வைத்து உள்ளது. மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் தங்கள் கருத்தை தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து அரசு ஒப்புதல் அளித்தவுடன் மேற்படி கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது.

Next Story