பீகாரில் லாலு பிரசாத் கட்சியில் இருந்து ஆளுங்கட்சிக்கு தாவிய 5 மேலவை உறுப்பினர்கள்
பீகாரில் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டீரிய ஜனதா தள கட்சியில் இருந்து 5 மேலவை உறுப்பினர்கள் ஐக்கிய ஜனதா தளத்தில் இன்று இணைந்துள்ளனர்.
பாட்னா,
பீகாரில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்துது வருகிறது. அங்கு சட்டசபை மேலவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்களாக குலாம் கவுஸ், குமுத் வர்மா மற்றும் பீஷ்ம ஷானி ஆகியோரது பெயர்களை அக்கட்சி அறிவித்து உள்ளது.
இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியான லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியில் அங்கம் வகித்து வரும் 5 மேலவை உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி ஆளுங்கட்சியில் இன்று இணைந்தனர். அவர்களை எங்களது குடும்பத்திற்குள் வரவேற்கிறோம் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் எம்.எல்.சி. ராஜீவ் ரஞ்சன் சிங் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story