பரிசோதனை, தொடர்பு கண்டறிதல், சிகிச்சை ஆகியவையே கொரோனாவிடம் இருந்து காக்கும்; ஐ.சி.எம்.ஆர். அறிக்கை


பரிசோதனை, தொடர்பு கண்டறிதல், சிகிச்சை ஆகியவையே கொரோனாவிடம் இருந்து காக்கும்; ஐ.சி.எம்.ஆர். அறிக்கை
x
தினத்தந்தி 23 Jun 2020 8:33 PM IST (Updated: 23 Jun 2020 8:33 PM IST)
t-max-icont-min-icon

பரிசோதனை, தொடர்பு கண்டறிதல் மற்றும் சிகிச்சை ஆகியவையே கொரோனா வைரசிடம் இருந்து உயிர்களை காக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.  இதனால் பாதிப்புகளை குறைப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) ஆனது, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய வழிமுறைகளை கொண்ட அறிக்கையை வெளியிட்டு உள்ளது.  அதில், பரிசோதனை, தொடர்பு கண்டறிதல் மற்றும் சிகிச்சை ஆகியவையே கொரோனா வைரசிடம் இருந்து உயிர்களை காக்கும் என்று தெரிவித்து உள்ளது.

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கொரோனா அறிகுறிகளை கொண்ட அனைத்து தனிநபர்களுக்கும் பரிசோதனைக்கான வசதி பரவலாக கிடைக்க செய்வது கட்டாயம் ஆகும்.

கொரோனா பாதிப்பு கட்டுப்படுவதற்கு, தொற்றுடன் தொடர்புடையோரை கண்டறியும் நடைமுறைகளும் வலுப்படுத்தப்பட்டு உள்ளன. 

நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகள், அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவை கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

இவற்றில், ஆர்.டி.-பி.சி.ஆர்., ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மற்றும் ஆன்டிபாடி பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளையும் இணைத்து செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

Next Story