தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா பாதிப்பு; மொத்தம் 5 லட்சத்தை நெருங்குகிறது + "||" + Over 17,000 new Covid-19 cases take India’s infection tally beyond 4.9 lakh; death toll at 15,301

இந்தியாவில் ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா பாதிப்பு; மொத்தம் 5 லட்சத்தை நெருங்குகிறது

இந்தியாவில் ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா பாதிப்பு; மொத்தம் 5 லட்சத்தை நெருங்குகிறது
ஒரே நாளில் இந்தியாவில் 17,296 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது.
புதுடெல்லி

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளதகவலில் 

இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,296 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. 407 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மொத்த பாதிப்பு - 4,90,401 ஆக உயர்ந்து 5 லட்சத்தை நெருங்கி உள்ளது. குணமடைந்தவர்கள் - 2,85,636 பேர், மொத்த உயிரிழப்பு 15,301 ஆகும் என கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு கொரோனா பாதிப்பு 33.39 ஆக உள்ளது.  தற்போது உலகில் சராசரி லட்சம் மக்கள் தொகைக்கு  120.21 பாதிப்புகள் உள்ளன.நாட்டில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு இறப்புகள் 1.06 ஆக உள்ளது.இது உலக சராசரியான இறப்புகள் 6.24 விட மிகக்குறைவு ஆகும்  என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவை தொடர்ந்து ஹாங்காங்கிலும் டிக்டாக் செயலியின் பயன்பாடுக்கு தடை
ஹாங்காங்கில் டிக்டாக் செயலியின் பயன்பாடு மற்றும் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2. 21 நாட்களில் கொரோனா வைரஸை வென்றுவிடலாம் என்றார், 100 நாட்களைக் கடந்து விட்டது பிரதமருக்கு சிவசேனா கேள்வி
21 நாட்களில் கொரோனா வைரஸை வென்றுவிடலாம் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், 100 நாட்களைக் கடந்து கொரோனா வைரஸ் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவது ஏன் என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
3. சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருவோர் விவரம்
சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
4. ஒரே நாளில் கொரோனாவை குணமாக்கும் மூலிகை மைசூர்பா; ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட வேண்டும்...?
கோவையில் மூலிகை மைசூர்பா மூலமாக ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைவதாக ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் வழங்கிய நோட்டீஸ் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது
5. இந்திய-சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு
இந்திய-சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.