தேசிய செய்திகள்

எல்லைப் பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு 170 சதவீதம் வரை சம்பள உயர்வு + "||" + Govt gives salary hike of upto 170% to people working on building roads in border areas: Report

எல்லைப் பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு 170 சதவீதம் வரை சம்பள உயர்வு

எல்லைப் பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு 170 சதவீதம் வரை சம்பள உயர்வு
எல்லைப் பகுதிகளில் சாலைகள் அமைப்பதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு 170 சதவீதம் வரை சம்பள உயர்வு அளிக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி

இந்தியாவிலேயே உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பகுதிகள் என  சில பகுதிகளை அரசு  வரையறுத்துள்ளது. அதில் முதல் பிரிவில் அசாம், மேகலாயா, சிக்கிம், திரிபுரா, உத்ரகாண்ட் உள்ளன. அடுத்த இடத்தில் அருணாசலபிரதேசம், ஜம்மு காஷ்மீர், மிசோரம் , நாகலாந்து ஆகிய மாநிலங்கள் உள்ளன.  ஆபத்து நிறைந்த பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள லடாக் பகுதி மூன்றாவது பிரிவில் உள்ளது. லடாக்கில் சமீபத்தில் இந்திய ராணுவம் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டது. இதனால், கோபமடைந்த சீனா, எல்லையில் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.

அண்டை நாடானா ,சீனா அடிக்கடி  ஆக்கிரமைப்பில் ஈடுபடுவதால் இந்த பகுதியில் பணிபுரிபவர்களின் உயிருக்கும் உத்திரவாதம் இல்லை என்கிற நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், லடாக்கில் சாலை போடுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் 100 சதவிகிதம் முதல் 170 சதகிவிதம் வரை உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பள உயர்வு ஜூன் 1- ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது. சாதாரண டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டருக்கு ரூ. 16,770 சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த சம்பளம் ரூ. 41,440 என அதிகரிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களுக்கு அதிகபட்சமாக ரூ.28,000 தான் சம்பளமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ. 25,700 சம்பளம் பெற்ற அக்கவுண்டன்டுக்கு இனிமேல் ரூ.47,360 சம்பளமாக வழங்கப்படும்.

சிவில் இன்ஜீனியருக்கு ரூ. 30,000 சம்பளம் வழங்கப்பட்டது. இந்த சம்பளம் அப்படியே இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.60,000 ஆக்கப்பட்டுள்ளது. மேலாளருக்கு ரூ.50,000 லிருந்து ரூ. 1,12,000 என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சீனியர் மேலாளர்களுக்கு ரூ. 55,000 என இருந்த சம்பளம் ரூ.1,23,600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, ரூ.5 லட்சத்துக்கான ஹெல்த் இன்சூரன்ஸ், ரூ. 10 லட்சத்துக்கான விபத்து காப்பீடு, போக்குவரத்து அலவென்ஸ்கள் தனி.


தொடர்புடைய செய்திகள்

1. விரல் 4 பகுதியில் சீனாவின் படைகள் பின் வாங்கின
சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் பாங்காங் த்சோவின் விரல் 4 பகுதியில் சீனாவின் படைகள் பின்வாங்கியதை காட்டுகின்றன.
2. லடாக்கில் எவ்வித சூழ்நிலையிலும் தாக்குதல் நடத்தும் முழு ஆற்றல் -இந்திய விமானப்படை உறுதி
லடாக்கில் எவ்வித வானிலை சூழலிலும் இரவு, பகலிலும் தாக்குதல் நடத்தும் ஆற்றல் தம்மிடம் இருப்பதை இந்திய விமானப்படை வெளிப்படுத்தி வருகிறது.
3. எதிரிகள் உங்கள் ஆற்றலையும் ,கோபத்தையும் கண்டிருக்கிறார்கள்- ராணுவ வீரர்களிடையே பிரதமர் மோடி பேசும் போது சீனாவுக்கு எச்சரிக்கை
எதிரிகள் உங்கள் ஆற்றலையும் ,கோபத்தையும் கண்டிருக்கிறார்கள்- லடாக்கில் ராணுவ வீரர்களிடையே பிரதமர் மோடி பேசும் போது சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
4. லடாக் ஏரியில் ரோந்து செல்ல, சீனாவுக்கு பதிலடி கொடுக்க அதிக சக்தி வாய்ந்த படகுகளை எல்லைக்கு இந்தியா அனுப்புகிறது
லடாக் ஏரியில் ரோந்து செல்ல சீனா ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கப்பற்படை அதிக சக்தி வாய்ந்த படகுகளை எல்லைக்கு அனுப்புகிறது.
5. எல்லையில் சீனாவின் படைகுவிப்பை தொடர்ந்து இந்தியா சக்தி வாய்ந்த பீஷ்மா பீரங்கிகளை நிறுத்துகிறது
லடாக் எல்லையில் சீனாவின் ஆக்ரோஷமான படைகுவிப்பை தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை நிறுத்துகிறது.