தேசிய செய்திகள்

கொரானாவுக்கு இறப்பு எண்ணிக்கை பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் குறைந்துள்ளது; டெல்லி முதல் மந்திரி பேட்டி + "||" + The death toll for coronation has been reduced by plasma therapy; Delhi CM

கொரானாவுக்கு இறப்பு எண்ணிக்கை பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் குறைந்துள்ளது; டெல்லி முதல் மந்திரி பேட்டி

கொரானாவுக்கு இறப்பு எண்ணிக்கை பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் குறைந்துள்ளது; டெல்லி முதல் மந்திரி பேட்டி
பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் கொரானா பாதிப்புக்கான இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, டெல்லியில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை அதிக உளவில் உள்ளது.  ஆனால், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.  அதனால் கவலைப்பட தேவையில்லை.

நாங்கள் மருத்துவ பரிசோதனையை 3 மடங்கு உயர்த்தி உள்ளோம்.  ஆனால், பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு 3 ஆயிரம் வரை மட்டுமே உயர்ந்து உள்ளது.  மொத்த நோயாளிகளில், தோராய அளவில் 45 ஆயிரம் பேர் வரை குணமடைந்து உள்ளனர்.

பிளாஸ்மா தெரபியால் தீவிர ஆபத்தில் உள்ள நோயாளிகளை காப்பாற்றுவது என்பது கடினம்.  ஆனால், மிதஅளவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை, அவர்களது நிலைமை கூடுதலாக மோசமடையாமல் இருப்பதற்கு இச்சிகிச்சை உதவும்.  இதுவே எங்களுக்கு கிடைத்துள்ள பரிசோதனை முடிவு ஆகும்.

எல்.என்.ஜே.பி. மற்றும் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகளில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிப்பதற்கு நாங்கள் அனுமதி பெற்றுள்ளோம்.  இதன்படி, எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் பிளாஸ்மா தெரபி சிகிச்சையை நாங்கள் அளிக்க தொடங்கிய பின்பு இறப்பு எண்ணிக்கை முன்பை விட குறைந்து உள்ளது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. எனக்கும், குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ. பேட்டி
எனக்கும், என்னுடைய குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து உள்ளதால் அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
2. கொரோனாவில் இருந்து மக்களை காப்பதில்தான் கவனம் உள்ளது:“நாங்கள் தேர்தலை பற்றி சிந்திக்கவில்லை” அமைச்சர் பேட்டி
“கொரோனாவில் இருந்து மக்களை காப்பதில் தான் எங்கள் கவனம் உள்ளது. நாங்கள் தேர்தலை பற்றி சிந்திக்கவில்லை“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
3. மூணாறு நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்கள் அனைவரின் உடல்களையும் மீட்க வேண்டும் உறவினர்கள் கண்ணீர் பேட்டி
மூணாறு நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்கள் அனைவரின் உடல்களையும் மீட்க வேண்டும் என்று உறவினர்கள் கண்ணீர்மல்க கூறினர்.
4. “கொரோனா இறப்பு விகிதத்தை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை” சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
கொரோனாவால் பலியானவர்களின் இறப்பு விகிதத்தை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
5. ‘கிராமப்புற மேம்பாட்டுக்காக தனிக்கவனம் செலுத்துவேன்’ சிவில் சர்வீசஸ் தேர்வில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்த சரண்யா பேட்டி
கிராமப்புற மேம்பாட்டுக்காக தனிக்கவனம் செலுத்துவேன் என சிவில் சர்வீசஸ் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த சரண்யா தெரிவித்தார்.