மேற்கு வங்காளத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி


மேற்கு வங்காளத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 26 Jun 2020 1:47 PM GMT (Updated: 26 Jun 2020 1:47 PM GMT)

மேற்கு வங்காளத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொல்கத்தா,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனால், சில மாநிலங்கள் ஊரடங்கை தளர்த்திய போது கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இதற்கிடையில், மேற்கு வங்காள மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 30 ஆம் தேதியுடன் (ஜூன்) முடிவுக்கு வர உள்ளது.

மாநிலத்தில் கொரோன வைரஸ் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கை ஜூலை 31 வரை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார்.

இந்நிலையில்,  அமல்படுத்தப்பட உள்ள ஊரடங்கில் காலை 5 மணி முதல் 10 மணி வரை சில தளர்வுகள் இருக்கும் என்னும் எஞ்சிய நேரங்களில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story