தேசிய செய்திகள்

டெல்லியில் ஜூலை 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை + "||" + Delhi Discusses Cutting 50% Syllabus, Schools To Stay Closed Till July 31

டெல்லியில் ஜூலை 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லியில் ஜூலை 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை
டெல்லியில் ஜூலை 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மனிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. டெல்லியில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த சூழலில், டெல்லியில் ஜூலை 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாநில துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா அறிவித்துள்ளார். 

கல்வித்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு இந்த அறிவிப்பை மனிஷ் சிசோடியா வெளியிட்டார்.  மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை 50 சதவிகிதம் அளவுக்கு குறைக்கும் திட்டம் பற்றியும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக மனிஷ் சிசோடியா தெரிவித்தார். 

மேலும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது புதிய சூழலுக்கு தகுந்தால் போல் தயாராக  திட்டம் உருவாக்கப்படும். எனவே மாணவர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள உதவும் வகையில் இந்த திட்டம் இருக்கும்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. மளிகை, காய்கறி கடைக்காரர்கள், தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை-மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மளிகை, காய்கறி கடைக்காரர்கள், தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
2. கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட 2-வது தவணை: ரூ.890 கோடியை மாநிலங்களுக்கு மத்திய அரசு விடுவித்தது
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதற்கு 22 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 2-வது தவணையாக ரூ.890 கோடியை மத்திய அரசு விடுவித்து உள்ளது.
3. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.89 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.89 கோடியாக உயர்ந்துள்ளது.
4. கொரோனா வைரசை கொல்லும் ‘ஆவி’ - ஆய்வில் நிரூபணம்
ஆவி பிடித்தல் மூலம் கொரோனா வைரசை கொல்லப்படும் என்று ஆய்வில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
5. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.86 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,86,91,659ஆக உயர்ந்துள்ளது.