இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியது; இறப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்கியது


இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியது; இறப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 27 Jun 2020 5:06 AM GMT (Updated: 27 Jun 2020 5:06 AM GMT)

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 508953 ஆக உயர்ந்துள்ளது; இறப்பு எண்ணிக்கை 15685 ஆக உயர்ந்து உள்ளது.



புதுடெல்லி

மத்திய சுகாதாரத்துறை தகவல்படி  இந்தியாவில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை சனிக்கிழமையன்று 5 லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  இது வரை இல்லாத வகையில் ஒரு நாள் பாதிபாக 18552 பாதிப்புகள் பதிவாகி உள்ளது. மேலும் 384 இறப்புகள் பதிவு செய்துள்ளது

மொத்தம் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் 508953 ஆகும், இதில் 197387 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 295881 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மொத்த இறப்புகள் 15685 ஆகும்.இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீட்பு விகிதம் 58.13 சதவீதமாக உள்ளது என தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதிகபட்சமாக மராட்டி மாநிலத்தில் ஒரே நாளில் 5024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு  ஆளானோரின் எண்ணிக்கை 1,52,765 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 175 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 3 ,460 ஆக இருந்தது. டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 77, 240 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் ஒரே நாளில் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை டெல்லியில் மொத்த உயிரிழப்பு 2,492 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டு உள்ள தகவலில் ஜூன் 26 வரை கொரோனா இருக்கிறதா என பரிசோதனை  நடத்திய மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 79,96,707; ஆக உள்ளது. நேற்று ஒருநாள் மட்டும் 2,20,479 மாதிரிகள் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது என கூறி உள்ளது.

Next Story