கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி 12-18 மாதங்களில் தயாராகி விடும்-உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி


கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி 12-18 மாதங்களில் தயாராகி விடும்-உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி
x
தினத்தந்தி 27 Jun 2020 8:52 AM GMT (Updated: 27 Jun 2020 8:52 AM GMT)

கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி 12-18 மாதங்களில் தயாராகி விடும் என உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி தெரிவித்து உள்ளார்.

புனே

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 98,98,220 ஆக உயர்ந்து உள்ளது; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 53,52,383 ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,96,077ஆக உயர்ந்து உள்ளது.   

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 25 லட்சத்தை கடந்துள்ளது. அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்தை கடந்து விட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 43 ஆயிரம் பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி இருப்பது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பிரேசில் ஒரே  நாளில் 41 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதில் நான்காம் இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிப்பு 5 லட்சத்தை  கடந்து உள்ளது.

கொரோனா தொற்று நோய்க்கான  தடுப்பூசி 12-18 மாதங்களில் தயாராகி விடும் என உலக சுகாதார அமைப்பின்  மூத்த விஞ்ஞானி தெரிவித்து உள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சவுமியா சுவாமி நாதன் கூறி இருப்பதாவது:-

கொரோனாவுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்குவது தற்போது உலகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவாலாக உள்ளது, இஅதை உருவாக்கும்  நிறுவனத்திற்கு 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இரண்டு பில்லியன் தேவைப்படலாம் 18.1 பில்லியன் டாலர் வரை நிதி வழங்கப்பட்டு உள்ளது.

200 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் உள்ளன, 15 தடுப்பூசிகள்  மனித மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபட்டு உள்ளன, 12 -18 மாதங்களில் தடுப்பூசிகள் தயாராக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

கோவக்ஸ் வசதி மூலம் 950 மில்லியன் டோஸ் வாங்குவதற்கும், தடுப்பூசிகளை மிக அதிக வேகத்தில் வழங்குவதை உறுதி செய்வதற்கும் அதிக வருமானம் மற்றும் உயர் நடுத்தர வருமான நாடுகளின் உதவி தேவை மார்டனா அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி சோதனையில் முன்னணியில் உள்ளது.

அவர்கள் 2 ஆம் கட்ட சோதனைகளுக்கு முன்னேறியுள்ளனர் மற்றும் பல நாடுகளில் 3 ஆம் கட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர். ஜூலை நடுப்பகுதியில் மருத்துவ பரிசோதனைகளின் 3 ஆம் கட்டத்திற்கு செல்லவும் மாடர்னா திட்டமிட்டுள்ளது. இருப்பினும், மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் தெரியும் வரை, இந்த தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு தெரியவில்லை. எனவே இது பல தடுப்பூசி போட்டியாளர்களின்  மருத்துவ வளர்ச்சியில் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:-

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவின் சோதனை தடுப்பூசி ஆகியவை மருத்துவ பரிசோதனைகளின் இறுதி கட்டங்களில் நுழைந்து உள்ளனர். இந்த தடுப்பூசி தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசிலிலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா 100 மில்லியன் டாலர் முதலீடு செய்து இந்தியா மற்றும் பிற குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஒரு பில்லியன் அளவில் பெருமளவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டு உள்ளது என கூறினார்.


Next Story