திட்டம் போட்டு செயல்படும் சீனா: இந்தியாவில் முதலீடு கடந்த 4 ஆண்டுகளில் 12 மடங்கு உயர்வு


திட்டம் போட்டு செயல்படும் சீனா: இந்தியாவில் முதலீடு கடந்த 4 ஆண்டுகளில் 12 மடங்கு உயர்வு
x
தினத்தந்தி 27 Jun 2020 9:23 AM GMT (Updated: 27 Jun 2020 9:23 AM GMT)

இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களில் சீனாவின் முதலீடு கடந்த 4 ஆண்டுகளில் 12 மடங்கு அதிகரித்துள்ளது என குளோபல் டேட்டா கூறி உள்ளது.

புதுடெல்லி

இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களில் சீனாவின் முதலீடு கடந்த 4 ஆண்டுகளில் 12 மடங்கு அதிகரித்துள்ளது. 2016ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்களில் சீனாவின் முதலீடு இரண்டாயிரத்து 881 கோடி ரூபாயாக இருந்தது.

இதையடுத்து ஆண்டுக்கு ஆண்டு சீன முதலீடு அதிகரித்துக்கொண்டே வந்தது. 2019ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்களில் சீன நிறுவனங்கள் 34 ஆயிரத்து 788 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குளோபல் டேட்டா என்னும் தரவுத்தளம் தெரிவித்துள்ளது.

அலிபாபாவும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களும், பேடிஎம், ஸ்னாப்டீல், பிக்பேஸ்கட், சொமேட்டோ ஆகியவற்றில் 19 ஆயிரத்து 663 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. டென்சென்ட் உள்ளிட்டவை ஓலா, ஸ்விக்கி, ஹைக், டிரீம்11, பைஜுஸ் ஆகியவற்றில் 18 ஆயிரத்து 150 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.

இருப்பினும், சமீபத்திய எல்லை மோதலால் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு கொள்கையை இறுக்குவது சீன முதலீட்டாளர்களுக்கு அவர்களின் முதலீட்டை அடைவதற்கு ஒரு சிக்கலாக அமையும்

ஆயினும்கூட, இது ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே, இரு நாடுகளுக்கும் இடையிலான குறிப்பிடத்தக்க இருதரப்பு முதலீட்டு உறவுகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் மட்டுமே நீண்டகால தாக்கத்தை உணர முடியும், என குளோபல் டேட்டா கூறி உள்ளது.

Next Story