நாட்டில் 8 மாநிலங்களில் கொரோனா பாதித்தோரில் 85.5% பேர் உள்ளனர்; சுகாதார அமைச்சகம் தகவல்


நாட்டில் 8 மாநிலங்களில் கொரோனா பாதித்தோரில் 85.5% பேர் உள்ளனர்; சுகாதார அமைச்சகம் தகவல்
x
தினத்தந்தி 27 Jun 2020 2:24 PM GMT (Updated: 27 Jun 2020 2:24 PM GMT)

நாட்டில் 8 மாநிலங்களில் கொரோனா பாதித்தோரில் 85.5% பேர் உள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்திற்கு கூடுதலாக கடந்து சென்று உள்ளது.  இதுவரை 15 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.  நாட்டில் கொரோனா பாதிப்பில் மராட்டியம் முதல் இடத்திலும், டெல்லி அடுத்த இடத்திலும் உள்ளன.  3வது இடத்தில் தமிழகம் உள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் கொரோனா பாதித்தோரில் 85.5% பேர் மராட்டியம், டெல்லி மற்றும் தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் உள்ளனர்.  இதேபோன்று கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கையானது, இந்த 8 மாநிலங்களில் 87 சதவீதம்  அளவுக்கு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதனையடுத்து, நாட்டிலுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய சூழ்நிலையை மந்திரிகள் குழுவுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் விரிவாக விளக்கியுள்ளது.  தொடர்ந்து, சுகாதார உட்கட்மைப்பினை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்படியும் கூறியுள்ளது.

Next Story