கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை -ராகுல் காந்தி குற்றச்சாட்டு


கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை -ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 27 Jun 2020 7:20 PM GMT (Updated: 27 Jun 2020 7:20 PM GMT)

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி இருக்கிறது. இந்த நிலையில், நாட்டில் புதிய பகுதிகளுக்கும் கொரோனா வேகமாக பரவி வருவதாகவும், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் ராகுல் காந்தி எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரோனாவை எதிர்த்து போராடமுடியாது என்று கருதி பிரதமர் மோடி அதனிடம் சரண் அடைந்து அமைதியாகிவிட்டதாகவும் கூறி இருக்கிறார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குழு, மந்திரிகள் குழு கூட்டங்களை மத்திய அரசு ரத்து செய்து விட்டதாகவும், கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதார அமைச்சகம் வெளியிடுவதை நிறுத்தி வைத்திருப்பதாகவும் வெளியான செய்திகளை ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் இணைத்து இருக்கிறார்.

Next Story