புதுச்சேரியில் கொரோனாவுக்கு ஓய்வு பெற்ற கான்ஸ்டபிள் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு


புதுச்சேரியில் கொரோனாவுக்கு ஓய்வு பெற்ற கான்ஸ்டபிள் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
x
தினத்தந்தி 28 Jun 2020 10:19 AM GMT (Updated: 28 Jun 2020 10:19 AM GMT)

புதுச்சேரியில் கொரோனா பாதிப்புக்கு ஓய்வு பெற்ற கான்ஸ்டபிள் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், புதுச்சேரியில் முதல் அமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கடந்த வெள்ளி கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அலுவலகத்தில் அவருடன் பணியாற்றியவர்களை, தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் நேற்று கூறும்பொழுது, அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.  இதனால் அடுத்த 2 நாட்களுக்கு, முதல் அமைச்சர் அலுவலகம் மூடப்படுகிறது என கூறினார்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயதுடைய ஓய்வு பெற்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று உயிரிழந்து உள்ளார்.  இதனால் புதுச்சேரியில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதுச்சேரியில் 512 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.  அவற்றில் 29 மாதிரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், புதுச்சேரியில் மொத்த பாதிப்பு 648 ஆக உயர்ந்து உள்ளது என அரசு வட்டாரம் தெரிவித்து உள்ளது.

Next Story