ராஜஸ்தானில் நடைபெறவுள்ள 10, 12 ஆம் வகுப்புத் தேர்வுகளுக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி


ராஜஸ்தானில் நடைபெறவுள்ள 10, 12 ஆம் வகுப்புத் தேர்வுகளுக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
x
தினத்தந்தி 28 Jun 2020 5:01 PM GMT (Updated: 28 Jun 2020 5:01 PM GMT)

ராஜஸ்தானில் நாளை நடைபெறவுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி,

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக நடைபெறாமல் இருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் வரும் ஜூன் 29(நாளை) மற்றும் ஜூன் 30 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெற்றோர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில், தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக சில தினங்களுக்கு முன் சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்து குறித்து அந்த மனுவில் பெற்றோர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதனையடுத்து இன்று இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தேர்வு நடைபெறும் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இந்த மனுவை தள்ளுபடி செய்தி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story